பொதுவாக தமிழரிடம் மட்டும் நிலவும் அபரிதமான ஒற்றுமையின்மைக்கு என்ன காரணம் என்று சிந்திக்கிறேன். இன்று தமிழர் சிந்தனை என்றாலே நாம் சார்ந்து இருக்கும், அல்லது சமூகத்தில் இரண்டற கலந்திருக்கும் திராவிட மற்றும் தமிழ் இயக்கங்களின் சிந்தனை தான் என்றாகி விட்டது. ஆனால் “தமிழ்” மற்றும் “திராவிட” இயக்கங்கள் இடையே நிலவுவதோ ஒரு வித குழப்பமான நிலை, ஒருவருக்கு ஒருவர் ஒத்துழையாமை, தேவையற்ற தன்னை தானே தனிமை படுத்திக்கொள்ளும் மனோபாவம், யார் நண்பர்கள் யார் எதிரிகள் என்று தெரியாமல் அனைவரையும் சந்தேகிக்கும் பார்வை ... இவை எல்லாம் நீடிக்க என்ன காரணம் என சிந்தித்த போது தோன்றிய விடை தான் “COGNITIVE DISSONANCE”.
Cognitive Dissonance often refers to inability to hold two opposite beleifs at the same time. அதாவது இருவேறு எதிர்மறையான எண்ணங்களை ஒருசேர மனதில் கொள்ள முடியாமை. உலகில் எல்லாமே “Black” and “White” என்று இரு வேறு எதிர் நிலைகளாய் இயற்கையாய் பிரிகின்றன என்று நம்பும் நமது மடத்தனமே இதற்கான மூலாதாரம். நாம் எந்த எந்த கொள்கைகள் எல்லாம் இயற்கையாய் ஒருசேர அமைந்தவை என்று நினைக்கிறோமோ அவை எல்லாம் எல்லாருக்கும் அப்படியே ஒரு சேர அமைந்ததாய் தெரிவதில்லை என்ற உண்மை பல நேரம் நமக்கு புரிவதில்லை. இந்த முரணை ஏற்று கொள்ளும் மனப்பான்மை எல்லாருக்கும் அமைந்து விடுவதில்லை, அதிலும் திராவிட மற்றும் தமிழ் இயக்கங்களுக்கு இந்த புரிதல் என்ன ஒரு காரணத்தினாலோ மிக மிக குறைவு !. இந்த அடிப்படை பிரச்சனையின் வெளிப்பாடே முதல் பத்தியில் குறிப்பிட்டு இருக்கும் குழப்பத்துக்கான காரணி. இதன் வெளிப்பாடை சில உதாரணங்களோடு அலசுவோம்.
திராவிட இயக்கங்களின் அடிப்படை கொள்கைகளாய் இன்று அறியபடுபவை சமூக நீதி என்று அழைக்கப்படும் பார்ப்பநீய எதிர்ப்பு, மற்றும் தனித் தமிழ் இயக்கம். ஆனால் இவை இரண்டும் எல்லா விதத்திலும் ஒன்று போபவை அல்ல. உதாரணத்துக்கு உருது, தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் தமிழகத்தில் வசிக்கும் பார்ப்பனர் அல்லாதோரை எப்படி அங்கீகரிப்பது என்பதில் உள்ள குழப்பம், அவர்கள் இடையே தனி தமிழ், கட்டாய தமிழ் பற்றி நிலவும் insecurity-ஐ புரிந்து கொள்ளாமை ஒரு எடுத்து காட்டு. ஆனால் தனித் தமிழ் , கட்டாய தமிழ் கல்வி, போன்ற கோஷங்கள் இவர்களை தனிமை படுத்துவதை உணர மறுக்கும் முரண் தான் இதில் வியப்பு !. பெரியார் சமூக நீதி கொள்கையில் உறுதியாய் இருந்த அளவுக்கு தனித்தமிழ் கொள்கையில் இருந்ததில்லை. தமிழை காட்டு மிராண்டி பாஷை , அதை படித்தால் திராவிடர் முட்டாளாக தான் ஆவார்கள் என்றும் சொன்னார். ஆனால் அதை தி.மு.க உருவான பின் மெதுவாய் மறைத்து, எதோ இவை இரண்டுக்கும் ஒரு இயற்கை கூட்டணி இருப்பது போன்ற மாயை உருவாக்க பட்டது. இன்றும் இந்த இரண்டு கொள்கைகளும் முரண் இல்லாமல் , மக்கள் ஒரே பக்கமாக பிரிகிறார்கள் என்று தங்களை தாங்களே ஏமாற்றி கொள்ளும் மனோபாவம் தான் நம்மிடையே நிலவுகிறது. சுப்ரமணிய சுவாமி, சோ போன்ற பார்ப்பனர்கள் ஊழல் ஒழிப்பு கொள்கையிலும், முல்லை பெரியார் பிரச்சனையிலும் எடுக்கும் நிலைப்பாடை சந்தேக பார்வையோடு தான் நம்மால் பார்க்க முடிகிறது. பார்ப்பன எதிர்ப்பில் தீவிர போக்கு கொண்ட வீரமணிகளால் கூட, சாதி இந்துக்களால் தான் இன்றும் தலித் அடக்குமுறை இன்றும் நடைபெறுகிறது என்ற முரணான கருத்தை ஏற்று கொள்ள முடிவதில்லை. இட ஒதுக்கீட்டு கொள்கையில் உள்ள (அ)நியாயங்களை ஏற்று கொண்ட அளவுக்கு , வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உள்ள (அ)நியாயத்தை உணர மறுக்கும் மனோபாவமே தென் படுகிறது. Cognitive Dissonance simply doesnt allow us to accept that, not all people can be naturally divided into 2 groups on whole host of what we think are natural “like” issues.
இலங்கை தமிழ் பிரச்சனையில் எடுத்து கொண்டால் , புலிகளையும், தமிழ் ஈழம் உருவாவதையும் காங்கிரஸ் வன்மையாய் எதிர்த்தது. ஆனால் சமூக நீதியிலும், இட ஒதுக்கீடிலும், ஓரணியில் உள்ள காங்கிரஸ், இந்த விஷயத்தில் எடுத்த எதிர்மறை போக்கு துரோகமாய் தெரிந்தது. ஆனால் , இவ்விஷயத்தில் நேர்மாறாக பா. ஜ. க ஆதரவு தெரிவித்தது நமது கண்களுக்கு புலப்படவே இல்லை. இந்து மக்கள் கட்சி போன்ற இயக்கங்கள் தீவிரமாக ஈழ சார் நிலை எடுத்தன. போர் நிறுத்தம் குறித்து சுஷ்மா ஸ்வராஜ், அத்வானி முதாலானோர் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினர், டெல்லியில் நடந்த அடையாள உண்ணாவிரத மேடைக்கும் வந்தார்கள். ஆனால் திராவிட மற்றும் தமிழ் இயக்கங்களால் இவர்களை கூட்டளிகளாய் ஏற்று கொள்ள முடியவில்லை. இவர்களுடன் ஒத்துழைத்து போராட்டத்தை தீவிரமாக தேசிய அளவுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. காவி தீட்டு பட்டால் வேறு விமர்சனங்கள் வருமே என்ற கவலை தொற்றி கொண்டது. தங்களின் இயற்கை தோழன் என்று கருதிய மார்க்சிஸ்ட் கட்சி ஈழத்தை ஆதரிக்காதது குறித்து வேதனை பட்டர்களே ஒழிய கிடைத்த தேசிய கட்சியோடு ஒத்துழைப்பதற்கு மனம் ஒப்பவில்லை. ஏனென்றால் அவர்கள் எதிரிகள் வேற விஷயத்தில் !. Cognitive Dissonance simply wouldnt allow us to accept the fact that, enemies in one issue can be natural allies & friends in another!
அதே போல் சுப்ரமணிய சுவாமி, சோ போன்ற சில முகங்களை வைத்து பார்ப்பனர்களை ஈழத்தின் எதிர்ப்பாளர்களாய் சித்தரித்து சுலபமாய் ஏற்று கொண்ட அளவுக்கு, இஸ்லாமியர்களை அணுக முடியவில்லை. சரியோ தவறோ, புலிகள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்ற கருத்து புலிகளின் சில செய்கைகளின் மூலமும், கடவுள் மறுப்பு, தனித்தமிழ் போன்ற தீவிர செயல்களின் மூலமும் இலங்கை மற்றும் இந்திய இஸ்லாமியர்கள் இடையே பரவி விட்டது. ஆனால் அதை ஏற்று கொள்ளும் மனோபாவம் இன்னும் பெரும்பாலான புலி ஆதரவாளர்கள் மத்தியில் வரவில்லை. மறுப்பதினால் அந்த உணர்வு களையப்பட போவதில்லை, அதை மாற்ற ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம இன்னும் கூட தோன்றவில்லை. அதனால் சமூக நீதியில் இயற்கை கூட்டளிகளானவர்கள், இந்த விஷயத்தில் முரண் பட்டு நிற்பதை மட்டும் மனம் ஏற்று கொள்ளவில்லை. பார்ப்பனர்கள் அனைவரும் ஈழத்துக்கு எதிரானவர்கள் என்று சுலபமாய் ஒட்டுமொத்தமாய் generalize பண்ண முடிந்த நமது மனதால், இஸ்லாமியர்கள் விஷயத்தில் இந்த முரணை ஏற்க முடியவில்லை. ஏதோ அவர்களில் ஒரு சிலர் தான் எதிர்க்கிறார்கள், பெரும்பான்மையினர் ஆதரிக்கிறார்கள் என்று மனதை தேற்றி கொள்ளும் போக்கே நீடிக்கிறது. ஆகமொத்தம் இவர்கள் எதிரிகளா, நண்பர்களா என்ற குழப்பமான திரி சங்கு நிலையிலேயே இன்னும் நீடிக்கிறது !. கட்டாய தமிழ் கல்விக்கு எதிரான நிலை எடுத்த கோபிநாத்தையும், விஜய தாரணியையும் திட்ட முடிந்த அளவுக்கு, ஜவாகிர்உல்லாவை எதிர்க்க நமக்கு மனம் வரவில்லை!.
இப்பொழுது அமெரிக்கா இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வந்தது. அவர்கள் ஏகாதிபத்திய வெறியர்கள், கொடுங்கோலர்கள் என்று பாடம் படித்த இடது சார்பு தமிழ் இயக்கங்களால் அவர்கள் தரும் ஆதரவை சந்தேக கண்ணோடு தான் பார்க்க முடிந்தது. அதே நேரம் இயற்கை கூட்டளிகளாய் கருதிய ரஷ்யா, சீனா, க்யுபா, வெனுசீலா போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாய் இருப்பதை ஏற்று கொள்ள முடியவில்லை. அவர்களை கடும் வார்த்தைகளால் திட்ட முடியவில்லை. விளைவு ?. அமெரிக்கா விற்கு எதிராய் ஒரு மெல்லிய கண்டனம், என் இதை அன்றே செய்யவில்லை என்ற வழக்கமான சந்தேகம் !. மேற்கண்ட இடது சாரி நாடுகள் எதோ ராஜபக்சேவால் உண்மை தெரியாமல் இன்று ஏமாற்ற பட்டதாகவும், அவர்கள் ஒரு நாள் நம் பக்கம் திரும்புவார்கள் என்று நம்மளை நாமே ஏமாற்றிக் கொண்டு தான் இருக்கிறோம் !
கூடங்குளம் பிரச்சனையில் இதே போல் தான், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க உலைக்கு ஆதரவாய் இருப்பதை ஏற்று கொள்ள முடிந்த தமிழ் இயக்கங்களால் , கம்யூனிஸ்ட் கட்சிகள் அதே நிலைப்பாடை எடுப்பதை ஏற்று கொள்ள முடியவில்லை. அப்துல் கலாமை பிற விஷயத்தில் போற்றும் இந்த இயக்கங்களால், இதில் கோபமாய் நிந்திக்க முடியவில்லை, அதற்காக அவர் கூற்றை ஏற்கவும் முடியவில்லை. இதில் விபரீதம் என்னவென்றால் ஜவஹிருல்லாவின் ஆதரவையும் சந்தேக பார்வையோடு பார்த்தார்கள் ஏன் என்றால் அவர் கட்டாய தமிழ் கல்வி விஷயத்தில் நேர எதிர் நிலைப்பாடை எடுத்தவர் ஆச்சே!. இன்று ராஜபக்ஷே அரசும் கூடன்குளத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது ?. எதிரிக்கு எதிரி ஒரே குழப்பம் ! இனி அப்படி அணுக போகிறோம் இந்த பிரச்சனையை ? J
நாற்பது டிகிரி வெப்பத்தில் தான் அணுவுலையில் இருந்து வெளியேறும் நீர் கடலில் கலக்கும், அதனால் மீன் வளம் பாதிக்க படாது என்று வல்லுனர்கள் சொன்னாலும் ஏற்க மறுக்கும் மனதுக்கு, ஆயிரம் ஆயிரம் பவள பாறைகளை உடைத்து இயற்கைக்கு முரணாய் தோண்டும் சேது சமுத்திர திட்டத்தால் மீன் வளம் பாதிக்கும் என்ற கருத்தை ஏற்க மனதில்லை. எத்தனையோ அணுவுலை பாதுகாப்பு பத்திரங்கள் பகிரங்க படுத்த பட்டாலும் ஏற்க மறுக்கும் மனதுக்கு, இது வரை சேது சமுத்திர திட்டத்தினால் ஏற்பட போகும் மீன் வள பாதிப்பு குறித்தோ, அல்லது நிஜமாகவே இந்த திட்டம் பொருளாதார அடிப்படையில் பயனளிக்குமா என்று யோசித்து இருக்கிறோமோ ?. Several Experts have raised a lot of tough questions about the impact of this project on the state of Fishery in Palk Strait and some have even called this project a downright economically foolish idea with revenue projections that are completely unrealistic, and ongoing maintenance cost being a gross under-estimation. ஆனால் இதை ஏற்குமா நமது இயக்கங்கள் ?. இல்லாத ஒரு ராமர் பாலத்தை ஆதரிக்கும் ஒரு காவிக்கூட்டம் இந்த திட்டத்தை எதிர்ப்பதனாலேயே, ஏதோ ஒரு மிக பெரிய தமிழக நன்மை இதில் அடங்கி இருப்பதாய் நம்பும் மனப்பான்மையே தான் நம்மிடம் பெரும்பாலும் நிலவுகிறது. அண்ணாவின் கனவுத்திட்டம் என்ற வெற்று கோஷத்தில் அத்தனை பொருளாதார நியாங்களையும் அடக்கி விட நினைக்கிறோம்.
இன்று பேசுகிறார்கள் , பிரஷாந்த் பூஷன் கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறார், அன்னா ஹஜாரே கூடிய விரைவில் வர போகிறார் என்று !. இவர்கள் எல்லாம் ஆரிய துரோகிகள், இந்தி மொழி வெறியர்கள், இட ஒதுக்கீடு கொள்கைக்கு விரோதமானவர்கள் என்று கருதும் திராவிட மற்றும் தமிழ் இயக்கங்களால் அவர்களின் வருகையையும், அவர்களின் ஆதரவையும் ஏற்று கொள்ள மனம் வருமா ? வராது !. ஜெயகுமார் போன்ற ஒற்றை பிரச்ச்சனைகாரர்கள் வேண்டுமானால் அவர்களின் ஆதரவை ஏற்று கொள்ளலாம். ஆனால் அதற்க்கு விலையாய் திராவிட தமிழ் இயக்கங்கள் ஜெயக்குமாரை விட்டு தூர விலகி சென்று விடுவார்கள். விளைவு ஒரே மேடையில் தோன்றாமல் பிளவு பட்டே இருவரும் தனி தனியே போராடுவார்கள் ! இறுதி முடிவு நமக்கு தான் தெரிந்த விஷயமாச்சே !
இப்படியாக திராவிட மற்றும் தமிழ் இயக்கங்கள், எல்லா விஷயத்திலும் மக்கள் இயற்கையாய் இரு கூட்டங்களாய் பிரிவதில்லை என்ற அடிப்படை கூற்றை ஏற்க முடியாமல் தவிக்கிறார்கள்!. அப்படி ஒரு “இயற்கை கூட்டணி” செயற்கையாய் அமைய மற்றும் அமைக்க துடிக்கிறார்கள். சிலர் அமையாத கூட்டணி அமைந்ததாய் தங்களை தாங்களே மேடை பேச்சிலும், வார்த்தை ஜாலத்திலும் ஏமாற்றியும் கொள்கிறார்கள். இயற்கை கூட்டணி, இயற்கை பிரிவுகள் என்று எதுவும் இல்லை என்ற அடிப்படை கூற்றை உணர மறுக்கும் வரை, பிரச்சனை அடிப்படையில் “எதிரிகளோடும்“ கூட்டணி அமைத்து போராடும் பண்பட்ட பாங்கு நமக்கு வரப்போவதில்லை. இப்படி Cognitive Dissonance அளவுக்கு அதிகமாய் இருக்கும் வரை, அது முடிவெடுக்கும் தன்மையை (Decision makingஐ) பாதிக்கும் வரை, இதற்கான விடிவு காலம் பிறக்க போவதில்லை. விளைவு - எல்லாரும் தம்மை அந்நியப்படுத்தியதாய் ஒரு கழிவிரக்கம், மற்றும் முகம்தெரிந்த / முகம்தெரியா துரோகிகளுக்கு சவால் விட்டு என்றாவது ஒரு நாள் மறுமலர்ச்சி பிறக்கும் என்ற வெற்று கோஷத்துடன் ஒன்றை விடுத்து அடுத்த பிரச்சனைக்கு தாவுகிறோம். இந்த விரக்தியின் மற்றொரு விளைவு தான் யார் எதிரிகள் யார் நண்பர்கள் என்ற தேவை இல்லாத குழப்பம் மற்றும் நம்மிடையே நிலவும் ஒற்றுமையின்மை . மீண்டும் முதல் பத்தியை படிக்கவும் ! J
No comments:
Post a Comment